பெத்தநாயக்கன்பாளையம் வரும் 7ல் ஐம்பொன் சிலை வழங்கும் விழா
ADDED :3114 days ago
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, தேன்மலை சிவமணிலிங்க சிவாலயத்துக்கு, வரும், 7ல், ஐம்பொன் சிலை வழங்கும் விழா நடக்கிறது. அதில், ஆனந்த நடராஜர், சிவகாம சுந்தரி ஆகிய ஐம்பொன்னாலான உற்சவமூர்த்திகள் சிலை வழங்கப்படும். தொடர்ந்து, அன்று காலை, 7:00 முதல், 8:00 மணிக்குள், புத்திரகவுண்டன் பாளையம் பஸ் ஸ்டாப்பில் இருந்து, சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. பின், தேன்மலை சிவாலய
வளாகத்தில், உலக மக்கள் நன்மைக்காகவும், அவர்கள், வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற்றிடவும், சிறப்பு பூஜை செய்து, அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, தேன்மலை சித்தர் குருஜி தங்கராஜ் செய்கிறார்.