உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலூர் வெங்கடேஸ்வரா சுவாமிக்கு திருக்கல்யாணம்

வேலூர் வெங்கடேஸ்வரா சுவாமிக்கு திருக்கல்யாணம்

வேலூர்: வேலூரில், வெங்கடேஸ்வரா சுவாமிக்கு நேற்று  முன்தினம் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வேலூர் அடுத்த, நாராயணி பீடம்
சார்பில் கட்டப்பட்ட, நாராயணி மஹால் திருமண மண்டபத்தில், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேஸ்வரா
சுவாமிக்கு, மேள தாளங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது.  இதில், சக்தி அம்மா, கலவை சச்சிதானந்த சுவாமிகள், திருமலை திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் பாஸ்கர் உட்பட ஏராளமானோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !