உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

முத்துமாரியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

பந்தலுார்: பந்தலுார் அருகே, பொன்னானி முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், பக்தர்கள்  திரளாக பங்கேற்றனர்.  பொன்னானி முத்துமாரியம்மன் கோவில், 6ம் ஆண்டு தேர்த்திருவிழா கடந்த, 28ம் தேதி காலை, 4:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதில், 29ம் தேதி  காலை, 6:00மணிக்கு திருமஞ்சள் சாற்றுதல், பகல், 11:00 மணிக்கு ஆற்றங்கரையிலிருந்து பறவைக்காவடி, முருகன் அலங்கார தேர், பால்குடம், காவடி ஊர்வலம் இடம்பெற்றது. தொடர்ந்து, பூகுண்டம் மிதித்தலும், அன்னதான நிகழ்ச்சியும், மாலை, 6:00 மணிக்கு அம்மன் திருத்தேர் ஊர்வலம் நடந்தது. 30ம் தேதி காலை, 6:00 மணிக்கு தீபாராதனைகளும், நீர்வெட்டுதலும், தொடர்ந்து மாவிளக்கு பூஜையும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது. அர்ச்சகர்கள் பரமசிவம், மகேந்திரராஜா தலைமையிலான குழுவினர் சிறப்பு பூஜைகளை செய்தனர். விழாவில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் கமிட்டி தலைவர் தியாகராஜா தலைமையிலான கோவில் கமிட்டியினர், கிராம மக்கள், இளைஞர் சங்கத்தினர் இணைந்து செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !