உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் காளியம்மன் சித்திரை விழா பெண்கள் பால்குட ஊர்வலம்

சேலம் காளியம்மன் சித்திரை விழா பெண்கள் பால்குட ஊர்வலம்

சேலம்: காளியம்மன் கோவில் சித்திரை விழாவையொட்டி, பெண்கள் நேற்று, பால்குட ஊர்வலம் சென்றனர். சேலம், நெத்திமேடு மணியனூர், காளியம்மன் கோவில் சித்திரை விழா கடந்த, 25ல், பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 30ல், திருவிளக்கு பூஜையை தொடர்ந்து, நேற்று, பால்குட ஊர்வலம் நடந்தது. காலை, 9:15 மணியளவில் கோவில் வளாகத்தில், புறப்பட்ட பால்குட ஊர்வலம், குமரகவுண்டர் முதல் தெரு, கரியபெருமாள் கோவில் கரடு, சங்ககிரி பிரதான சாலை, மணியனூர் பிரதான சாலை வழியாக சென்று, 11:30 மணியளவில், கோவிலை சென்றடைந்தது. பெண் பக்தர்கள், 100க்கும் மேற்பட்டோர் பால்குட ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். காளியம்மனுக்கு, பாலாபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !