குளித்தலை ராமானுஜர் ஆயிரமாவது திருநட்சத்திர வைபவம்
ADDED :3111 days ago
குளித்தலை: குளித்தலை, நீலமேகபெருமாள் கோவிலில், ராமானுஜர் ஆயிரமாவது திருநட்சத்திர வைபவம் நடந்தது. இதில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசபெருமாள், ராமானுஜர் திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை ஆகியன கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து, சீனிவாசபெருமாள் கருடசேவை, ராமானுஜர் சேஷா வாகனத்தில் எதிர் சேவை, திவ்யபிரபந்த கோஷ்டி, வேதநாராயண கோஷ்டி, பஜனை, திருவீதி உலா போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தன. விழா ஒருங்கிணைப்பாளர்கள் கோபாலதேசிகன், டாக்டர் ரகுநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.