சிருங்கேரி ஸ்ரீஸ்ரீ பாரதீய தீர்த்த சுவாமிகள் அருளாசி
திருப்பூர்: திருப்பூருக்கு விஜயம் புரிந்துள்ள சிருங்கேரி சாரதா பீடாதிபதி, ஸ்ரீஸ்ரீ பாரதீய தீர்த்த சுவாமிகள், ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள், நேற்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடம் பீடாதிபதிகள், ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீய தீர்த்த சுவாமிகள், ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள், திருப்பூருக்கு விஜயம் செய்துள்ளனர். திருப்பூர் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில், நேற்று முன்தினம் பூர்ண கும்ப வரவேற்பு, துõளிபாத பூஜை, ஸ்ரீஸ்ரீ ஜகத்குருவின் அருளுரை ஆகியன நடைபெற்றது. நேற்று காலை, சிருங்கேரி ஸ்ரீ மடத்தை சேர்ந்த அர்ச்சகர்களால், ஸ்ரீ சாரதா சந்திர மவுலீஸ்வர பூஜை நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீஸ்ரீ ஜகத்குரு, பொதுமக்களுக்கு அருளாசி வழங்கினார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசனம் செய்து, ஆசீர்வாதம் பெற்றனர். பிஷா வந்தனம், தீர்த்தப் பிரசாதம் வழங்குதல், குரு பாதுகா பூஜை, ஸ்ரீ சாரதாம்பாள் பாதுகா பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மாலை, உடையாளூர் ஸ்ரீ கல்யாண ராம பாகவதர் குழுவினரின் பஜனை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, ஸ்ரீ சாரதா சந்திர மவுலீஸ்வரர் பூஜையை, ஸ்ரீஸ்ரீ ஜகத்குரு நடத்தி, அருளாசி வழங்கினார். இன்று காலை, 7:00 முதல், 11:00 வரை, ஸ்ரீ மடத்தை சேர்ந்த அர்ச்சகர்களால், ஸ்ரீ சாரதா சந்திர மவுலீஸ்வரர் பூஜை நடத்தப்படுகிறது. காலை, 10:00 முதல் 12:00 வரை, ஸ்ரீஸ்ரீ ஜகத்குரு சுவாமிகள், பக்தர்களுக்கு தரிசனம், தீர்த்தப்பிரசாதம், பிஷா வந்தனம், பாத பூஜைகள் நடக்கிறது.