உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் ஆற்றில் மே 10ல் அழகர் இறங்குகிறார்

சோழவந்தான் ஆற்றில் மே 10ல் அழகர் இறங்குகிறார்

 சோழவந்தான்: ஜெனகை நாராயணப்பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் மே 10ம் தேதிஅழகர் இறங்குகிறார். அன்று காலை 5:30 மணிக்கு பெருமாள் கள்ளழகர்
திருக்கோலத்தில் வெண்குதிரையில் எழுந்தருளி, காலை 9:15 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார். மே 11 இரவு 9:00 மணிக்கு இரட்டை அக்ரஹாரம் கிருஷ்ணன் கோயில் அரங்கில்,சோழவந்தான் யாதவர் சங்கம் சார்பில் தசாவதாரம் நிகழ்ச்சி நடக்கிறது. மே 12 வைகை ஆற்றில் இரவு 9:00 மணிக்குபூப்பல்லக்கில் அழகர் புறப்பாடு நடக்கிறது. கோயில் தக்கார்
சக்கரையம்மாள், செயல் அலுவலர் லதா உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !