உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி மதுரைவீரன் கோவிலில் திருக்கல்யாண விழா

பொள்ளாச்சி மதுரைவீரன் கோவிலில் திருக்கல்யாண விழா

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மதுரை வீரன் கோவிலில்,  திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கஸ்தூரிபாய் வீதியில் வெள்ளையம்மன், பொம்மியம்மன் உடனமர் மதுரைவீரன் கோவில்
அமைந்துள்ளது. இங்கு பட்டத்தரசியம்மன், முனீஸ்வரன் சன்னதிகளும் உள்ளன. கோவிலில், 53ம் ஆண்டு உற்சவ விழா நடந்து வருகிறது. கடந்த மாதம் 14ம் தேதி நோன்பு
சாட்டப்பட்டது. கடந்த, 30ம் தேதி கிராம சாந்தி, மே 1ம் தேதி சக்தி கும்ப தீர்த்தம் எடுத்தல், 2ம் தேதி மதுரைவீரன், பட்டத்தரசியம்மன் திருவீதியுலா நடைபெற்றது. நேற்று, மாவிளக்கு
ஊர்வலம், திருக்கல்யாணம் நடந்தது. இன்று பொங்கல் வைத்தல், நாளை 5ம் தேதி மஞ்சள் நீராடுதல், 6ம் தேதி அபிஷேக பூஜை, 8ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !