திருவள்ளூர் குரு முக்தீஸ்வரர் கோவிலில் கூட்டு வழிபாடு
ADDED :3117 days ago
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமைந்துள்ள பொம்மியம்பாள் சமேத குரு முக்தீஸ்வரர் கோவிலில், நேற்று, தேவாரம் திருவாசகம் ஓதி கூட்டு வழிபாடு நடந்தது. திருவள்ளூர் அடுத்த, மணவாளநகரில், சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ பெருமானார் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஞான வளாகம் நால்வர் திருமடம் செயல்படுகிறது. இந்த திருமடத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் உலக நலனுக்காக கூட்டு பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.தேவாரம், திருவாசகம் 109வது விண்ணப்பம் மற்றும் கூட்டு வழிபாட்டை நேற்று, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொம்மியம்பாள் சமேத குரு முக்தீஸ்வரர் கோவிலில், நேற்று, மாலை 4:30 மணி முதல், இரவு 8:30 மணி வரை நடத்தினர். கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழாவை சிறப்பிக்கும் வகையில் இந்த கூட்டு பிரார்த்தனை நடை பெற்றது.