திருப்போரூர் கந்த சுவாமி கோவில் உரிமங்களுக்கு ஏலம்
ADDED :3118 days ago
திருப்போரூர்: கந்த சுவாமி கோவிலில், பிரசாத விற்பனை உரிமம் உள்ளிட்ட உரிமங்களுக்கான பொது ஏலம், வரும், 10ம் தேதி நடத்தப்படுவதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்போரூரில், இந்துசமய அறநிலையத் துறையின் பொறுப்பில், கந்த சுவாமி கோவில் உள்ளது. கோவிலில், பக்தர்களுக்கு பிரசாதங்கள் விற்பனை உரிமம், காணிக்கை தலைமுடிகள் சேகர உரிமம் மற்றும் பிற உரிமங்கள், ஆண்டுதோறும், கோவில் நிர்வாகத்தால், பொது ஏலம் நடத்தப்பட்டு, அதிக தொகை கோரும் தனியாரிடம் வழங்கப்படும்.தற்போது, வரும் ஜூலை 1 முதல், 2018 ஜூன் 30 வரை, ஓராண்டிற்கான உரிமம் வழங்க, வரும், 10ல், உதவி ஆணையர் முன்னிலையில், பொது ஏலம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நமது நிருபர்