வாடிப்பட்டி மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை திருக்கல்யாணம்
ADDED :3111 days ago
வாடிப்பட்டி: வாடிப்பட்டி மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, நாளை(மே 7) திருக்கல்யாணம் நடக்கிறது. வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை கிராமத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்
பாலித்தார். இன்று திருக்கல்யாண மண்டபத்தில் சீர்வரிசை நிகழ்ச்சி நடக்கிறது, நாளை சுந்தரேஸ்வரர் சுவாமி மாப்பிள்ளை அழைப்புடன் காலை 8:35 மணி - 8.59 மணிக்குள் மீனாட்சி
திருக்கல்யாணம் நடக்கிறது. மே 8ல், மாலை 5:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் மற்றும் கிராமமக்கள் செய்துள்ளனர்.