கொடுமுடியில் வெங்கம்பூர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா
கொடுமுடி: தெற்குப்புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலில், நேற்றிரவு முதல் அதிகாலை வரை, ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.கொடுமுடி, வெங்கம்பூர் கிராமம், தெற்குப்புதுப்பாளையத்தில் முத்து மாரியம்மன் கோவில், பொங்கல் விழா, கடந்த, ௨ல்
பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
மூன்றாவது நாளான நேற்று, அக்னி சட்டி மற்றும் தீர்த்தக்குட ஊர்வலம் நிகழ்ச்சி நடந்தது. பிற்பகல், 3:00 மணியளவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். சிலர் அலகு குத்தி வந்தனர். இதையடுத்து இரவு, 6:00 மணியளவில் பொங்கல் வைபவம் நடந்தது. இதில் எட்டுபட்டி கிராமங்களை சேர்ந்த, நூற்றுக்கணக்கான பெண்கள், அதிகாலை வரை பொங்கல் வைத்து
அம்மனை வழிபட்டனர். நான்காம் நாளான இன்று, கிடா வெட்டும் நிகழ்ச்சி, நடக்கிறது. நாளை (6ம் தேதி) மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.