பழநியில் இலவச பஞ்சாமிர்தம்
ADDED :3108 days ago
பழநி: பழநி முருகன் கோவிலில், பக்தர்களுக்கு இலவச பஞ்சாமிர்தம் வழங்கும் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி இன்று துவங்கி வைக்கிறார். பழநி திருக்கோவில் நிர்வாகம் சார்பில், அபிஷேக பஞ்சாமிர்தம், அரை கிலோ டப்பா, 35, டின், 40 ரூபாய்க்கு விற்கின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பக்தர்களுக்கு தொன்னையில், இலவச பஞ்சாமிர்தம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதன்படி, தினமும் பக்தர்களுக்கு இலவசமாக பஞ்சாமிர்தம் வழங்க, இந்து சமய அறநிலைய துறை முடிவு செய்துள்ளது. திட்டத்தை, காணொலி காட்சி மூலம், முதல்வர்
பழனிசாமி இன்று துவக்கி வைக்கிறார்.
கோவில் இணை ஆணையர் ராஜமாணிக்கம் கூறுகையில், தினமும் மாலை, 5:30 மணி சாயரட்சை பூஜைக்கு பின், இலவச பஞ்சாமிர்தம், தொன்னையில் வழங்கப்படும். 2,000
பக்தர்களுக்கு, 20 கிராம் வீதம், 40 கிலோ பஞ்சாமிர்தம் வழங்க உள்ளோம், என்றார்.