உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூரில் சிருங்கேரி சுவாமிகள் நெரூரில் சிறப்பு பூஜை

கரூரில் சிருங்கேரி சுவாமிகள் நெரூரில் சிறப்பு பூஜை

கரூர்: சிருங்கேரி சுவாமிகள், நெரூரில் உள்ள சதாசிவ பிரமேந்திராள் அதிஷ்டானத்தில் நேற்று பூஜை நடத்தினர். கர்நாடகா மாநிலம், சிருங்கேரி மடம் பாரதி தீர்த்த சுவாமிகள்,
விது சேகர பாரதி சுவாமிகள் ஆகியோர், கரூர் மாவட்டத்தில், 4ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். நேற்று காலை, 10:00 மணியளவில், கரூர் அடுத்த நெரூர் ஸ்ரீ சாரதாம்மாள் கோவில் கும்பாபிஷேக விழாவை, விதுசேகர பாரதி சுவாமிகள்  நடத்தி வைத்தார்.

பின், பாரதீ தீர்த்த சுவாமிகள், விதுசேகர பாரதி சுவாமிகள் ஆகியோர், காலை, 11:30 மணிக்கு சதாசிவ பிரமேந்திராள் அதிஷ்டானத்துக்கு வந்தனர். அப்போது, புதுக்கோட்டை  கோவில்கள் சார்பில், சுவாமிகளுக்கு பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, சதாசிவ பிரமேந்திராள் அதிஷ்டானத்தில், சுவாமிகள் சிறப்பு பூஜைகளை செய்தனர்.

புதுக்கோட்டை கோவில் செயல் அலுவலர் பாண்டியராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !