பரமக்குடி, உத்தரகோசமங்கையில் மீனாட்சி திருக்கல்யாணம்: சித்திரை தேரோட்டம்
பரமக்குடி,: பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி(ஈஸ்வரன் கோயில்) மற்றும் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை பிரம்மோத்சவ விழாவில், திருக்கல்யாணம் நடந்தது.
பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் ஏப்., 29 ல் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் பிரியாவிடையுடன் சுவாமி, அம்பாள் நந்தி, கிளி, சிம்ம, கைலாச, அன்ன, ரிஷப, குதிரை வாகனங்களில் வீதியுலா வந்தனர்.
நேற்று காலை 9 மணிக்கு ஈஸ்வரன் கோயிலில், சந்திரசேசகரசுவாமி மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. பின்னர் 9.20 மணிக்கு காய்கறிகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட
மணப்பந்தலில் ஊஞ்சல் சேசவையில் விசாலாட்சி அம்மனுக்கும் - சந்திரசேசகர சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடந்தது.
*இதே போல் பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மாலை 7 மணிக்கு சுந்தரேஸ்வரருக்கு மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து இரவு 7:45 மணிக்கு மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடந்தது.
அப்போது ஏராளனமான பெண்கள் தங்களது தாலிகளை புதுப்பித்துக் கட்டிக்கொண்டனர். இரவு 9 மணிக்கு சுவாமி பிரியாவிடையுடன் யானை வாகனத்திலும், அம்பாள் பூப்பல்லக்கிலும் வீதியுலா வந்தனர். இன்று காலை 9 மணிக்கு சித்திரை தேரோட்டம் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செசய்திருந்தனர்.
கீழக்கரை: உத்தரகோச மங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கடந்த ஏப். 30 அன்று கொடியேற்றத்துடன் விழா
தொடங்கியது. நாள் தோறும் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு விசேஷ பூஜைகள் நடந்து வருகின்றது.
மங்களேஸ்வரி, பிரியாவிடை மங்களேஸ்வரர் உற்சவ மூர்த்திகளாய் நான்குரத வீதிகளிலும் உலா வந்தனர். சடங்கு, நலுங்கு உருட்டுதல், மாப்பிள்ளை அழைப்பு, காசி யாத்திரைக்கு
பின்னர் மாலை 4:30 மணிக்கு, வேதமந்திரங்கள் முழங்க குருக்கள் சுவாமி சார்பாக மங்கல நாண் ஏற்றினார்.
பக்தர்கள் மீது அட்சதை தூவிய போது சிவ சிவ கோஷம் முழங்கப்பட்டது. சிறப்பு தீபாராதனை நடந்தது. குங்குமம், மஞ்சள் கயிறு, தாம்பூலங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சசமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பழமை வாய்ந்த புராதன சிறப்பினை உடையது. நேற்று காலை 6 மணியளவில் கணபதி ஹோமம், ருத்ர ஜெப வேள்விகள் நிறைவேற்றப்பட்டன.
மூலவர்களான மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் செசய்யப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
காலை 9:30 மணியளவில் உற்சவ மூர்த்திகளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. மஞ்சள் தாம்பூல பிரசாதம் வழங்கப்பட்டது. ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.