உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி தமிழிசை சங்கம் சார்பில் திருக்கல்யாண உற்சவம்

பொள்ளாச்சி தமிழிசை சங்கம் சார்பில் திருக்கல்யாண உற்சவம்

பொள்ளாச்சி : ஆத்மலிங்கம் டிரஸ்ட், பொள்ளாச்சி தமிழிசை சங்கம் சார்பில், ஸ்ரீ அலமேலுமங்கா, பத்மாவதி சமேத சீனிவாச பெருமாளின் திருக்கல்யாண உற்சவம் நாளை கே.கே.ஜி., திருமண மண்டபத்தில் நடக்கிறது. விழாவையொட்டி, நாளை காலை, 9:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி பூஜை, புண்யாகவாசனம், மகாசங்கல்பம், மண்டல பூஜையும் நடக்கிறது.
காலை, 10:30 மணிக்கு கணபதி, நவக்கிரக, சுதர்சன, தன்வந்த்ரி, மண்டல தேவதா ேஹாமங்கள், காலை, 11:45 மணிக்கு பூர்ணாகுதி, மகா தீபாராதனையும் இடம் பெறுகின்றன.
மாலை, 4:00 மணிக்கு கணபதி பூஜை, புண்யாகம், உலக நலன் வேண்டி மகாசங்கல்பம், விவாஹ ஹோமம், மாங்கல்யதாரணம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !