உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் சிவன் கோவிலில் தேர் திருவிழா

விழுப்புரம் சிவன் கோவிலில் தேர் திருவிழா

விழுப்புரம்: விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில், பிரம்மோற்சவ தேர்திருவிழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 29ம் தேதி பிடாரி, விநாயகர் உற்சவமும், 30ம் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்தது.

தொடர்ந்து, 1ம் தேதி சூரிய பிரபை, 2ம் தேதி அதிகார நந்தி சேவை, 3ம் தேதி நாக வாகனம், 4ம் தேதி பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகன புறப்பாடு நடந்தது. இதைத்தொடர்ந்து, 7ம் தேதி திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனம் உலா நடந்தது. நேற்று காலை ரிஷப
வாகனத்தில் திருத்தேர் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !