உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விக்கிரவாண்டி பனையபுரத்தில் தேர் திருவிழா

விக்கிரவாண்டி பனையபுரத்தில் தேர் திருவிழா

விக்கிரவாண்டி: பனையபுரம் பனங்காட்டீஸ்வரன் கோவிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேர்திருவிழா நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் பனங்காட்டீஸ்வரன்
கோவிலில் சித்திரை மாதத்தை முன்னிட்டு கடந்த 8 நாட்களாக சித்திரை உற்சவங்கள் நடைபெற்றது. 9வது நாளான நேற்று சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேர்திருவிழா நடந்தது. காலையில் வினாயகர், முருகன், பனங்காட்டீஸ்வரன், சத்தியாம்பிகை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

காலை 9 மணிக்கு வினாயகர், முருகன்,பனங்காட்டீஸ்வரன், சத்தியாம்பிகை உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் ஏற்றப்பட்டு, பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து
இழுத்தனர். விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையதுறை செயல் அலுவலர்
முத்துலட்சுமி, மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !