உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரூர் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

அரூர் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

அரூர்: பிரதோஷத்தை முன்னிட்டு, அரூரில் உள்ள சிவன் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வர்ணீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு
சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், அரூர் சந்தைமேட்டில் உள்ள வாணீஸ்வரர் கோவிலில் நடந்த வழிபாட்டில், பக்தர்களுக்கு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்  பாலித்தார். தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதேபோல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள சிவன்  கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !