குளித்தலை சித்திரை பெருவிழா தேரோட்டம் கோலாகலம்
ADDED :3116 days ago
குளித்தலை: குளித்தலை தாலுகா, சத்தியமங்கலம் பஞ்சாயத்து, அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வர் மலைக்கோவில் சித்திரை பெருவிழா, கடந்த ஏப்ரல், 30ல் துவங்கியது. ஒவ்வொரு நாளும், சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, திருவிதி உலா நடந்தது. நேற்று
முன்தினம் இரவு குதிரை தேர், வாண வேடிக்கை போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 6:30 மணியளவில், திருத்தேர்வடம் பிடித்தலில், நூற்றுக்கணக்கான பக்தர்கள்
பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில், எம்.எல்.ஏ., ராமர், முன்னாள் அறங்காவல் குழுத்தலைவர் முருககணபதி, உதவி ஆணையர் சூரியநாராயணன் உள்ளிட்ட பலர் முன்னிலை
வகித்தானர். இத்தேர், மலையைச் சுற்றி, நான்கு கிலோ மீட்டர் தூரம் சென்று, மூன்றாம் நாள் நிலையை வந்தடையும்.