தொடையைத் தட்டக்கூடாது என்று எதனால் சொல்கிறார்கள்?
ADDED :3250 days ago
மகாபாரதத்தில், தருமன் சூதாடியபோது திரௌபதியை வைத்து சூதாடினான். பாண்டவர்கள் தோற்ற உடனே துச்சாதனனை விட்டு திரௌபதியை அழைத்து வரச் சொல்ல, வர மறுத்த திரௌபதியை தலைமுடியைப் பிடித்து இழுத்து துச்சாதனன், சபையில் கொண்டு வந்து நிறுத்திய உடனே துரியோதனன் அந்தத் தொடையை காண்பித்துதான். என் தொடையின் வந்து உட்கார் என்று கூறினான். என் தொடையில் வந்து உட்கார் என்று எப்போது அவன் சொன்னானோ அப்போது, அதைப் பார்த்து வெகுண்ட பீமன், நீ என் மனைவியை உன் தொடையில் உட்காரச் சொன்னதால், அந்தத் தொடையில் அடித்தே நான் உன்னைக் கொல்வேன் என்றான். அவ்வாறு, தொடையில் அமரச் சொன்ன துரியோதனனின் செயல், ஒரு குல அழிவுக்கே காரணம் ஆனது. ஆகவேதான், தேவையின்றி, தொடையைத் தட்டக்கூடாது என்று பெரியவர்கள் சொன்னார்கள்.