ரங்கநாத சுவாமி கோவில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :3117 days ago
கரூர்: கரூர், அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவில், தேரோட்ட விழா கோலாகலமாக நடந்தது. கரூரில், பிரசித்தி பெற்ற அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், சித்திரை திருவிழா கடந்த, 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சுவாமி திருவீதி உலா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட விழா நேற்று காலை, 8:30 மணிக்கு நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். இன்று காலை அமராவதி ஆற்றில் தீர்த்த வாரியும், இரவு பல்லக்கு உற்சவமும், நாளை இரவு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.