ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
ADDED :3117 days ago
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு 504 பால்குட ஊர்வலம் நடந்தது. கடலுார் அடுத்த சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 504 பால்குட ஊர்வலம் நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு வேழ விநாயகர் கோவிலிருந்து பால்குடங்கள் ஊர்வலமக புறப்பட்டு ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து 10:00 மணிக்கு சுவாமிக்கு பால்குடங்கள் அபிேஷகம் நடந்தது. 11:00 மணிக்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. விழாவில் பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.