உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை சித்திரை திருவிழா: சேஷ வாகனத்தில் கள்ளழகர்

மதுரை சித்திரை திருவிழா: சேஷ வாகனத்தில் கள்ளழகர்

மதுரை : இன்று (ஏப்.23ல்) அழகர்கோவில் கள்ளழகர் கருடவாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு காட்சி அளிக்கிறார். முன்னதாக சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஒருமுறை துர்வாச மகரிஷி, சுதபஸ் முனிவரைக் காண வந்திருந்தார். முனிவரோ கண்டும் காணாதது போல் இருந்தார். கோபத்தில் துர்வாசர், “நீ மண்டூகமாக (தவளை) போ,” என்று சாபமிட்டார். ஏன்...மண்டூகமாக (தவளையாக) போ என சாபம் கொடுக்க வேண்டும்! மச்சமாக(மீன்) போ என சாபம் கொடுத்திருக்கலாமே! மீன் என்றால் தண்ணீரில் மட்டுமே வாழ முடியும். தவளை என்றால் தண்ணீரிலும், தரையிலும் வாழலாம். முனிவர்களின் கோபம் கூட மற்றவர்களுக்கு நல்லதையே செய்யும்.சுதபஸ் அன்று முதல் தவளையாய் மாறி நீண்டகாலம் வைகையில் கிடந்தார். “திருமால் என்று இந்த வைகையில் திருவடி பதிக்கிறாரோ அன்று உனக்கு விமோசனம் கிடைக்கும்,” என்றும் துர்வாசர் சாப விமோசனம் அளித்திருந்தார். அதன்படியே வைகையில் தவளை வடிவில் தவமிருந்தார் சுதபஸ். திருமாலும், சுந்தரராஜர் என்றும் அழகர் என்றும் பெயர் தாங்கி கருட வாகனத்தில் வைகையில் எழுந்தருளவே சுதபஸ் தன் சுயஉருவம் பெற்று மோட்சம் அடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !