உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தேரோட்டம்

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தேரோட்டம்

கடலுார்: திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று நடந்த தேரோட்டத்தை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனையொட்டி தினமும் சிறப்பு பூஜை, பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்று மீண்டும் தேரடியை வந்தடைந்தது. மாலை ஆழ்வார் உற்சவ சாற்று முறையும், இரவு பானக பூஜையும் நடந்தது. இன்று காலை மட்டையடி உற்சவமும், இரவு தெப்பல் உற்சவத்தை தொடர்ந்து புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !