உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழாயிரம் பண்ணை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஏழாயிரம் பண்ணை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சாத்தூர், ஏழாயிரம்பண்ணை ஸ்ரீபராசக்திமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயில் சித்திரை பொங்கல் விழா கடந்த ஏப்ரல் 30 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.நாள் தோறும் அம்மன் ரிஷபம், சிம்மம், அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருள வீதி உலா நடைபெற்றது.கடந்த 7ல் பொங்கல்விழா நடந்தது. பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை 5:00 மணிக்கு நடந்தது. இதில் பக்தர்கள் ஒம்சக்தி பராசக்தி என கோஷமிட்டப்படி வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்த தேர் மாலை 5:45 மணிக்கு நிலையை அடைந்தது. இதன் பின் இரவு 9:00 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் ரத வீதியில் தடம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. 10:00 மணிக்கு திருவிழா கொடியிறக்கும் நிகழ்ச்சி நடந்தது.இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஏழாயிரம்பண்ணை நாடார்கள் உறவின்முறை சங்கத்தினனர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !