உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னியம்மன் கோவில் தேரோட்டம்

பொன்னியம்மன் கோவில் தேரோட்டம்

நுகும்பல் : நுகும்பல் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடந்தது. சித்தாமூர் அடுத்துள்ள நுகும்பல் கிராமத்தில், பொன்னியம்மன் மற்றும் கங்கையம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், சித்திரை மாதத்தில் தேர் திருவிழா நடைபெறும். இந்த் ஆண்டிற்கான விழா, சித்ரா பவுர்ணமியான நேற்று நடந்தது. விழாவையொட்டி, அம்மனுக்கு அபிஷேகமும், சந்தனக் காப்பும் நடைபெற்றது. வாண வேடிக்கையுடன், பொன்னியம்மன் தேர் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. நுகும்பல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !