உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிலவுக்கு சிறப்பு தீபாராதனை

நிலவுக்கு சிறப்பு தீபாராதனை

ஆர்.கே.பேட்டை : சித்ரா பவுர்ணமியை ஒட்டி, நிலவுக்கு நேற்று, சிறப்பு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள், முழு நிலவை போற்றி தொழுதனர். சித்ரா பவுர்ணமியை ஒட்டி, கோவில்களில் நேற்று, சிறப்பு தீபாராதனை நடந்தது. திறந்தவெளியில், நின்று பவுர்ணமி நிலவுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம், கங்கையம்மன் கோவில், பாண்டரவேடு தொப்பையம்மன் கோவில்களில், நேற்று இரவு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !