உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குங்கும மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

குங்கும மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

திருப்பூர் : திருப்பூர் ஷெரீப் காலனி, குங்கும மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில், ஸ்ரீ கற்பகரட்சாம்பிகை அலங்காரத்தில், அம்மன் நேற்று எழுந்தருளினார். இக்கோவில் பொங்கல் திருவிழா, நேற்று முன்தினம்,  பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. ஸ்ரீ கற்பக ரட்சாம்பிகை அலங்காரத்தில், பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். வரும், 19ம் தேதி வரை, மகாலட்சுமி, சந்தான லட்சுமி, ஆதிபராசக்தி, அர்த்தநாரீஸ்வரர், ஆண்டாள், சமயபுரம் மாரியம்மன், காதம்பரி, அன்னபூரணி அலங்காரங்களில், அம்மன் எழுந்தருளவுள்ளார். வரும், 14ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடக்கிறது. 15ம் தேதி காலை, பால் குட ஊர்வலம், மாலையில் கம்பம் கும்பம் போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 16ம் தேதி, விநாயகர் பொங்கல், பூவோடு எடுத்தல், கொங்கு பண்பாட்டு மையம் சார்பில், ஈசன் சலங்கை ஆட்டக்குழு சார்பில், பெருஞ்சலங்கை நிகழ்ச்சி மற்றும் அம்மை அழைத்தல் நடக்கிறது. வரும், 17ம் தேதி, காலை மாரியம்மன் பொங்கல், மாவிளக்கு ஊர்வலம்; இரவில், கம்பம் தீர்த்தக்கரை சேருதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 18ம் தேதி, மஞ்சள் நீர் உற்சவமும்; 19ம் தேதி அன்னதானமும் நடக்கிறது. பொங்கல் விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ குங்கும மாரியம்மன் கோவில் கமிட்டி நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !