பெரமண்டூர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3118 days ago
திண்டிவனம் : பெரமண்டூர் அம்புஜவல்லி சமேத ஆதிவராக பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. திண்டிவனம் வட்டம், பெரமண்டூர் கிராமத்தில் உள்ள அம்புஜவல்லி சமேத ஆதிவராக பெருமாள் கோவில், திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, முதற்கால யாக பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழா நடந்தது. திருக்கோவிலுார் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் சீனிவாச ராமானுஜாச்சாரியார், திருக்கோட்டியூர் மாதவாச்சாரியார் ஆகியோர், விழாவை நடத்தி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை, கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.