உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி இஸ்லாமியர்கள் பிரார்த்தனை

மழை வேண்டி இஸ்லாமியர்கள் பிரார்த்தனை

மீஞ்சூர் : கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மழை வேண்டி இஸ்லாமியர்கள், சிறப்பு கூட்டு தொழுகை மற்றும் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதியுறுவதும், விவசாயிகளின் விளைநிலங்கள் வறண்டு கிடப்பதால் வேதனையில் வாடுவதும் தொடர்கிறது. இதிலிருந்து விடுபட மழை ஒன்றே தீர்வு என்பதால், மீஞ்சூர் அரியன்வாயல் பள்ளிவாசல் ஜமாத் சார்பில், நேற்று, இஸ்லாமியர்கள் சிறப்பு கூட்டு தொழுகை மற்றும் பிரார்த்தனை மேற்கொண்டனர். இதில், மீஞ்சூர், பழவேற்காடு, அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். மக்கள் அவதியை போக்க மழை பொழிய வேண்டும் என, இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர். சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டவர்களிடம், இதுபோன்ற சமயங்களில் எவ்வாறு பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும், தனிப்பட்ட பாவங்களில் இருந்து விடுபடுவதும் எப்படி என, தலைமை இமாம்கள் விவரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !