காஞ்சிபுரம் கோயிலில் சித்ரா பவுர்ணமி
ADDED :3074 days ago
அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டை மற்றும் காஞ்சிபுரம் கோயிலில் சித்ரகுப்தருக்கு தனி சன்னதி உள்ளது. சித்ரா பவுர்ணமி அன்று சித்ரகுப்தன் அவதரித்த நாளாகும்.இந்நாளில் சித்ரகுப்தனை வழிபடுவதன் மூலம் நம் பாவ கணக்குகளை குறைத்து கொள்ளலாம். இந்நாளில் மாலையில் ஸ்னானம் செய்து, சித்ரகுப்தனை மனதில் எண்ணி, ’நாங்கள் மலையளவு செய்த பாவத்தை கடுகளவாகவும், கடுகளகு செய்த புண்ணியத்தை மலையளகாகவும் எழுதிக் கொள்,’ என பிரார்த்திக்க வேண்டும் என்பது அக்கால மரபு. இதை தொடர்ந்து அருப்புக்கோட்டை அமுதலிங்கஸ்வரர் கோயிலில் உள்ள சித்ரகுப்தன் சன்னதியில் சித்ரகுப்தருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.