உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியநாயகி அம்பாள் ஈஸ்வரன் கோவிலில் பவுர்ணமி விழா

பெரியநாயகி அம்பாள் ஈஸ்வரன் கோவிலில் பவுர்ணமி விழா

குளித்தலை: குளித்தலை அடுத்த, ஆர்.டி.மலை பெரியநாயகி அம்பாள் சமேத விரையாச்சிலை ஈஸ்வரர் தேவஸ்தான கோவிலின் குடிபாட்டுகாரர்கள் ஆண்டுகள் தோறும், மிகப்பெரிய அளவில் சித்திரை பவுர்ணமி விழா நடத்துவது வழக்கம். பல்வேறு காரணங்களால், ஐந்து ஆண்டுகளாக விழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், பக்தர்களின் கோரிக்கையால் இந்த ஆண்டுக்கான சித்திரை பவுர்ணமி விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. அன்று மாலை பெரியநாயகி அம்மனுக்கு சந்தனக்காப்பு சாத்துபடி விசேஷ பூஜைகள் செய்தனர். இரவு தாரை தப்பட்டை முழங்க புஸ்ப வாகனத்தில் சோமாலிஸ்கந்தர், குதிரை வாகனத்தில் சந்திரசேகரர், அன்னவாகனத்தில் சோமசுந்தர், மயில்வாகனத்தில் வள்ளி தெய்வானை முருகன் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமிகள் முன்செல்ல, வாணவேடிக்கையுடன் முத்துப்பல்லக்கில் பெரியநாயகி அம்பாள் வீதி உலா வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, பெரியநாயகி அம்மாள் சமேத விரையாச்சிலைஈஸ்வரர் அருள் பெற்று சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !