உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பர்கூர் அருகே பெருமாள் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்

பர்கூர் அருகே பெருமாள் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்

கிருஷ்ணகிரி: பர்கூரில், பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பர்கூர் அருகே, பாலிநாயனப்பள்ளி பஞ்., வாத்தியார் கொட்டாய் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில், 41ம் ஆண்டு திருவிழா, கடந்த, 8ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, அபிஷேகம், யாக பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. கடந்த, 9, 10ல் சுவாமிக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடந்தது. 10 இரவு, சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணம் முடிந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் பக்தர்களுக்கு பெருமாள் அருள் பாலித்தார். இதை தொடர்ந்து வாண வேடிக்கை நடந்தது. நேற்று இரவு, அர்ச்சுனன் தவநிலை நாடகம் நடந்தது. இன்று காலையில், கங்கனம் விசர்ஜனம் வசந்த உற்சவம் மற்றும் இரவில் சைன உற்சவமும் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !