உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளி, தெய்வானையுடன் சுவாமி திருவீதி உலா

வள்ளி, தெய்வானையுடன் சுவாமி திருவீதி உலா

தர்மபுரி: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று முன்தினம் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. தர்மபுரி நெசவாளர் காலனியில் உள்ள ஓம்சக்தி விநாயகர் வேல்முருகன் கோவிலில், முருகருக்கு, நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, பால்குட ஊர்வலம் மற்றும் பாலாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு, 9:00 மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன் முருகருக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு, நெசவாளர் காலனியில் உள்ள வீதிகள் வழியாக வள்ளி, தெய்வானையுடன், மணக்கோலத்தில், சுவாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !