உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மனுக்கு ரூ.50 லட்சத்தில் தேர்

முத்துமாரியம்மனுக்கு ரூ.50 லட்சத்தில் தேர்

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், ஒன்பதாம்பாலிக்காடு முத்துமாரியம்மனுக்கு, 50 லட்சம் ரூபாயில் புதிய தேர் கட்டப்பட்டுள்ளது. நாமகிரிப்பேட்டை ஒன்றியம், ஒன்பதாம்பாலிக்காடு கிராமத்தில், முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடக்கும். கோவிலுக்கு, புதிய தேர் செய்ய இப்பகுதி மக்கள் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள், பக்தர்கள் சார்பில் புதிய தேர் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 50 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டது. தேர் செய்யும் பணி, ஆறு மாதங்களுக்கு முன் துவங்கியது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை புதிய தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இப்பகுதியை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் தேர்வடம் பிடித்து இழுத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !