விரத நாளில் எங்கே சாப்பிடலாம்?
ADDED :3110 days ago
கார்த்திகை, சஷ்டி போன்ற நாட்களில் விரதம் மேற்கொண்டால் நம் வீட்டில் சாப்பிட்டால் விரத பலன் முழுமையாக கிடைக்கும். மற்றவர் வீட்டில் சாப்பிட்டால் பலன், உணவளித்தவருக்கு சேர்ந்து விடும். காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களிலும் பிறர் அளிக்கும் உணவைச் சாப்பிட்டால் யாத்திரை சென்ற புண்ணியம் அவர்களைச் சேரும்.