ஹோமத்தின் பலன் யாருக்கு?
ADDED :3174 days ago
இஷ்ட தெய்வத்திற்குரிய உணவை, அக்னி பகவான் மூலம் அனுப்பி வழிபடும் முறை ஹோமம். இதற்கு விசேஷ விதிமுறைகள் உள்ளன. இதை முறையாக பின்பற்றாவிட்டால் எதிர்மறை பலன் உண்டாகும் என்பதால், ஆசாரம் மிக்கவர்களால் மட்டுமே ஹோமம் நடத்தப்பட வேண்டும். ஒருவர் தானே முன் நின்று ஹோமம் நடத்தினால் முழுமையான பலனும், பிறர் மூலம் ஹோமம் நடத்தினால் பாதி பலனும் உண்டாகும். யாருக்காக நடக்கிறதோ அந்த நபர், ஹோமத்தில் பங்கேற்பது அவசியம். இயலாவிட்டால் அவரது மனைவி அல்லது குடும்பத்தினர் பங்கேற்பது அவசியம்.