உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவிலில் பூகுண்டம்: பக்தர்கள் நேர்த்திக்கடன்

முத்துமாரியம்மன் கோவிலில் பூகுண்டம்: பக்தர்கள் நேர்த்திக்கடன்

குன்னுார்: குன்னுார் சோலாடாமட்டம் முத்துமாரியம்மன் கோவிலில், 52வது ஆண்டு திருவிழா மற்றும் பூகுண்டம் விழா நடந்தது. குன்னுார் சோலாடாமட்டம் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில், 52வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துங்கியது. தொடர்ந்து கரக ஊர்வலம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்பு நடந்த பூகுண்டம் நிகழ்ச்சியில், பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர். மஞ்சூர் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !