கோவிலுார் மடாலயத்துக்கு சிருங்கேரி சுவாமி வருகை
ADDED :3150 days ago
காரைக்குடி: கோவிலுார் மடாலயத்துக்கு சிருங்கேரி பாரதி தீர்த்த மகா சுவாமி, விதுசேகர பாரதி சுவாமி வருகை தந்தனர். மடாலயம் சார்பில் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமி, டிரஸ்டிகள் நாராயணன், ராமனாதன், கண்ணப்ப செட்டியார், மக்கள் தொடர்பு அலுவலர் குமரப்பன் வரவேற்றனர். மடாலயத்தில் சந்திர மவுலீஸ்வரர் பூஜை நடத்தி, பக்தர்களுக்கு ஆசி வழங்கி பேசியதாவது: தவறாது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும். பிறருக்கு உதவ வேண்டும், என்றார்.ஏற்பாடுகளை மடாலய கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் செல்லப்பா மாயாண்டி, ரவீந்திரன், மணிமொழி மோகன், மணிமொழி முருகன், அலுவலர்கள் வெள்ளையப்பன் அழகப்பன், பெத்தபெருமாள் கனகராஜ் செய்திருந்தனர்.