உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சியம்மன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை

காமாட்சியம்மன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை

குன்னுார்: குன்னுார் ஓட்டுப்பட்டறை கஞ்சி காமாட்சியம்மன் கோவில் ஆண்டு திருவிழாவில், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. குன்னுார் ஓட்டுப்பட்டறை பகுதியில் உள்ள கஞ்சி காமாட்சியம்மன் கோவிலில், ஆண்டு விழா நடந்தது. விழாவில், முளைப்பாலிகை, திருக்கல்யாணம், கரக உற்சவம் நடந்தது. இதில், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இன்னிசை கச்சேரி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !