வேதவிநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
ADDED :3400 days ago
கடலுார்: புருகீஸ்பேட்டை வேதவிநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி நடந்தது. கடலுார் அடுத்த புருகீஸ்பேட்டை கிராமத்தில் உள்ள வேதவிநாயகர் கோவிலில் கடந்த 14ம் தேதி சங்கடஹர சதுர்த்தி 22வது ஆண்டு விழா நடந்தது. விழாவையொட்டி மகா தீபாராதனை நடந்தது. விநாயகர் வெண்சோழி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேத்தியாத்தோப்பு: வீரமுடையாநத்தம் வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் எருக்கம் பூ, அருகம் புல் மாலை சாற்றி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.