வேல்முருகன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3073 days ago
சின்னாளபட்டி: என்.பஞ்சம்பட்டியில் சித்தி விநாயகர், வேல்முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி, இரு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாடு, பூர்ணாகுதி, சிறப்பு பூஜைகளுடன் கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு விசேஷ அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.