சிதம்பரம் கோவிலில் நாழிகை மணி
ADDED :3106 days ago
கோவில்களில் பூஜையின் போது மணி அடிப்பது வழக்கம். சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேரத்தைக் குறிக்கும் விதமாக, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை மணி அடிக்கின்றனர். 24 மணி நேரமும் இம்மணி ஒலிக்கப்படும். இதற்கு, நாழிகை மணி என்று பெயர். திருவாரூர் தவிர, அனைத்து கோவில்களில் உள்ள சிவன்களும் இத்தலத்தில் நடக்கும் அர்த்தஜாம பூஜையின் போது ஒடுங்குவதாக ஐதீகம். இரவு 10 மணிக்கு நடராஜர் சன்னதியில் இந்த பூஜை நடக்கும். நாழிகை மணி ஒலித்த பிறகே, இந்த பூஜையை நடத்துவர்.