மதுரையில் மஞ்சமலை கோயில் காட்டில் வளரும் மரங்கள்
ADDED :3097 days ago
மதுரை: மதுரை கிரீன் அமைப்பின் சார்பில் வலையபட்டி மஞ்சமலை கோயில் காடு பகுதியில், மரங்கள் அறியும் பயணம் நிகழ்ச்சி நடந்தது.இதன் ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம்
கூறியதாவது: மஞ்சமலை கோயிலை சுற்றியுள்ள மரங்களை வெட்டினால் சுவாமி குற்றம் என்று, இப்பகுதி மக்கள் நம்புகின்றனர். இதனால், இங்குள்ள மரங்கள் பாதுகாப்பாக
வளர்ந்திருக்கிறது. இதே போல், மதுரையில் உள்ள பசுமை காடுகளுக்கு மாணவர்கள், மக்களை அழைத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே இப்பயணத்தின் நோக்கம், என்றார். பேராசிரியர் ஸ்டீபன், நிர்மலா பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் ரஞ்சிதம் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.