மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
3032 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
3032 days ago
திருப்பூர் : காங்கயம் சிவன்மலை கிரிவல பாதையில், 10 ஏக்கர் பரப்பில் உள்ள ஆத்தா குளத்தை, 25 ஆண்டுகளுக்கு பின் வேர்கள் அமைப்பினர் மற்றும் இளைஞர்கள் இøந்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், சிறப்பு வாய்ந்த மலைக்கோவிலாக சிவன்மலை சுப்ரமணிய சுவாமி விளங்குகிறது. கிரிவலப்பாதையில், 10.5 ஏக்கரில் அமைந்துள்ள ஆத்தா குளம், உள்ளது. கடந்த, 25 ஆண்டுகளாக குளம் தூர்வாரப்படாமல் உள்ளதால், குளம் மூட்பட்டு தண்ணீர் முறையாக தேங்கி நிற்பதில்லை.இதனால், குடிநீர் பஞ்சம் மற்றும் கால்நடைகள், விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 17ம் தேதி நடந்த ஜமாபந்தியில் சிவன்மலை இளைஞர்கள் மற்றும் காங்கயம் வேர்கள் அமைப்பினர் ஒன்றிøந்து கலெக்டரிடம் குளத்தை தூர்வார அனுமதி வேண்டி மனு அளித்தனர். கலெக்டரும் இதற்கான அனுமதியை வழங்கினார்.நேற்று காலை பூமி பூஜைக்கு பின், காங்கயம் பி.டி.ஓ., மகேஸ்வரி, தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார். அண்ணா பல்கலை மாவர் ராஜா, இயற்கை குறித்து பேசினார். முதல் கட்டமாக, சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடக்கிறது.இக்குளத்தில் நீர் தேங்கும் போது, சிவன்மலை சுற்றி வசிப்போர் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் பிரச்னையை சமாளிக்க முடியும்.
3032 days ago
3032 days ago