புனித நூல்கள் வீட்டில் இருந்தாலே புண்ணியம் என்கிறார்களே!
ADDED :3105 days ago
சில நூல்கள், சாஸ்திரங்களில் பகவத் ஸ்வரூபமாகவே சொல்லப்படுகிறது. உதாரணமாக, ராமாயணம், பாகவதம், பகவத் கீதை, விஷ்ணு சஹஸ்ரநாமம், இவை எல்லாம் ஸப்த கோஷங்கள். பகவானுடைய முதல் வடிவமான ஸப்தமாகிய ஒலிவடிவைக் கொண்டவை. ஸ்ரீமத் பாகவாதப்தோயம் ப்ரத்யட்ச: கிருஷ்ண ஏவைஹி: வேதப் ப்ராசேதாசி சாட்சாத் ராமாயணாத்மன என்று வேதமே ராமாயணமாக இருப்பது! பாகவதமே கிருஷ்ணனாக இருப்பது என்பது போல, பகவத் கீதை என்பது பகவானுடைய நேர் வசனங்கள். பகவான் வாய் திறந்து பேசிய வார்த்தைகள். அதனால் வீட்டில் வைத்து பூஜை செய்வது மிகவும் விசேஷம் மட்டுமல்லாமல் குறைந்தபட்சம் ஒவ்வொரு நாளும் ஒரு சுலோகம் அல்லது இரு சுலோகத்தையாவது படிப்பதற்கோ அல்லது கேட்பதற்கோ முயற்சிக்க வேண்டும்.