உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாம்பமூர்த்தீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வருண ஜெபம்

சாம்பமூர்த்தீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வருண ஜெபம்

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, ஏத்தாப்பூர் சாம்பமூர்த்தீஸ்வரர் கோவிலில், மழை வேண்டி வருண ஜெபம் மற்றும் சிறப்பு யாகம் நேற்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. 10:00 மணிக்குமேல், மழை பெய்ய வேண்டியும், ஊர் மக்கள் சுபிட்சம் பெறவும், கோவில் வளாகத்தில் உள்ள நந்தி சிலையை சுற்றி, சிறு தொட்டி அமைத்து, அதன் கழுத்து வரை, தண்ணீர் நிரப்பினர். சிவாச்சாரியார்கள், ஞானஸ்கந்த குருக்கள், ஜெகதீசன் குருக்கள் ஆகியோர் முன்னிலையில், நந்திக்கு சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடந்தது. தொடர்ந்து, சாம்பமூர்த்தீஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

* அதேபோல், நன்றாக மழை பொழிந்து, தாராளமாக விவசாயம் செழித்து வளர வேண்டும் என, இடைப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. நகராட்சி முன்னாள் சேர்மன் கதிரேசன் தலைமையில் நடந்த பூஜையில், ஏராளமானோர் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !