குன்னூர் அம்மன் கோவில் ஆண்டு விழா
ADDED :3100 days ago
குன்னூர் : குன்னூர் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், 23வது ஆண்டு நிறைவு விழா நடந்தது.
இதன் ஒரு பகுதியாக, மகளிர் அணி சார்பில் விளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து விநாயகர் கோவில் வளாகத்தில் இருந்து அம்மன் அழைப்பு நடந்தது. காலை, 7:00 மணிக்கு யாக
பூஜை துவங்கியது. பின்பு, மகா கணபதி ஹோமம், வருண பூஜை, கால பைரவர் பூஜை, 108 சங்காபிஷேக பூஜை, துர்கா பூஜை, லட்சுமி பூஜை, அலங்கார பூஜை நடந்தது.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மன் காமாட்சியம்மன் அலங்காரத்தில் நகர் வலம் வந்தார். இன்று காலை, 10:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, மாலை, 6:00 மணிக்கு ஊஞ்சள் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை தேவாங்க சங்கம், நிர்வாக கமிட்டியினர், தேவாங்க இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் மகளிர் அமைப்பினர் செய்து வருகின்றனர்.