உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மல்லசமுத்திரம் காளியம்மன் கோவிலில் வரும் 26ல் திருவிழா

மல்லசமுத்திரம் காளியம்மன் கோவிலில் வரும் 26ல் திருவிழா

மல்லசமுத்திரம்: ராமாபுரம், செல்வமுத்து மாரியம்மன், ஓம் காளியம்மன் கோவில் திருவிழா, வரும், 26ல் நடக்கிறது. மல்லசமுத்திரம் ஒன்றியம், ராமாபுரம் சந்தைபேட்டை அருகே, செல்வமுத்து மாரியம்மன், ஓம்காளியம்மன் கோவில் திருவிழா, வரும், 26ல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, கடந்த, 16ல் பூச்சாட்டுதல் நடந்தது. இன்று இரவு அம்மை அழைக்கப்படுகிறது.

நாளை மாலை, 5:00 மணிக்கு, புஷ்ப பல்லக்கில் சுவாமி ஊர்வலம், அலகு குத்துதல், அக்னி கரகம், பூங்கரகம், வானவேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. வரும், 26 அதிகாலை, 4:00 மணிக்கு ஓம் காளியம்மனுக்கு பெரும்பூஜை, 4:30 மணிக்கு மாரியம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு, கோவில் கிணற்றில் கும்பம் விடப்படும்.

மறுநாள் காலை மறு அபிஷேகம் நடைபெறும். வரும், 28ல் பொங்கல் வைத்தலுடன் திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !